அரசின் சின்னங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் – உயர்நீதிமன்றம்

The judge ruled that out-of-office MPs, ministers, judges and civil servants should use the state emblem.

பதவிக்காலம் முடிந்த எம்பி, அமைச்சர்கள், நீதிபதிகள், அரசு ஊழியர்களும் அரசின் சின்னம் பயன்படுத்துவதாக நீதிபதி கருத்து.

தேசிய மற்றும் மாநில அரசின் சின்னங்கல் தவறாக பயன்படுத்துவதை காவல்துறை தடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கான்ஸ்டபிள் கூட நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளை எவ்வாறு அமல்படுத்தலாம் என ஆலோசனை வழங்க வேண்டும்.

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆலோசனை வழங்க நீதிபதி எஸ்எம் சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார். மறைந்த முன்னாள் எம்பி அன்பரசு, அரசின் சின்னங்களை தவறாக பயன்படுத்தியதாக ககன் சந்த் போத்ரா சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஆணையிடப்பட்டுள்ளது.

பதவிக்காலம் முடிந்த எம்பி, அமைச்சர்கள், நீதிபதிகள், அரசு ஊழியர்களும் அரசின் சின்னம் பயன்படுத்துவதாக நீதிபதி கருத்து தெரிவித்தார். மேலும், அனைவரும் சின்னத்தை பயன்படுத்தினால் போக்குவரத்துக்கு காவலர்கள் அந்த வாகனத்தை எப்படி நிறுத்துவார்கள் என்றும் கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.