கொட்டித் தீர்த்த கனமழை: கன்னியாகுமரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

தொடர் மழை காரணமாக முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அழகு மீனா விடுமுறை அறிவித்துள்ளார்.

schools in Kanyakumari

கன்னியாகுமரி :கனமழை காரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது.

இதேபோல், இன்றும் அந்த மாவட்டத்திற்கு வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அழகு மீனா விடுமுறை அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் 6 இடங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை பதிவாகியுள்ளது. நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை கணக்கீட்டில், அதிகபட்சமாக கோழிப்போர்விளையில் 11 செ.மீ அளவுக்கும், தக்கலையில் 10 செ.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது.