இன்று வெளியாகிறது மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பட்டியல்!!தலைவர் கமல்ஹாசன் வெளியிடுகிறார்!!

this news gives information about Today is the list of People's Justice Party's list of candidates released by Kamal Hassan !!

மக்களவைத் தேர்தல் தேதி அறிவித்ததை தொடர்ந்து தமிழகத்தில்  தி.மு.க மற்றும் அ.தி.மு.க வேட்பாளர்களை அறிவித்தனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்களை இன்று வெளியிடுகிறார் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.

கமல்ஹாசன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார்.

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

அதேபோல்  மக்களவை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம்  கட்சிக்கு “டார்ச் லைட்” சின்னமாக ஒதுக்கப்பட்டது.

மக்களவைத் தேர்தல் தேதி அறிவித்ததை தொடர்ந்து தமிழகத்தில்  தி.மு.க மற்றும் அ.தி.மு.க வேட்பாளர்களை அறிவித்தனர்.

இந்நிலையில்  மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்களை இன்று  வெளியிடுகிறார் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.