கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தக்காளி விலை, வரத்து அதிகரிப்பால் தற்போது மெல்ல மெல்ல குறையத் தொடங்கியுள்ளது.
அதன்படி, கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த வாரம் ரூ.150. வரை விற்கப்பட்ட தக்காளி, நேற்று ரூ.100க்கும், இன்று ரூ.10 குறைந்து ரூ.90க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் வரும் நாட்களில் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், சின்ன வெங்காயம் மற்றும் இஞ்சியின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஏற்றத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றயை நிலவரப்படி, இஞ்சி ஒரு கிலோ ரூ.200க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.170க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், பீன்ஸ், உருளை, முள்ளங்கி, கேரட், முருங்கைகாய், பெரிய வெங்காயம், வாழைக்காய், நூக்கல் உள்ளிட்ட காய்களின் விலையும் குறைந்துள்ளது.
