#Breaking : தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

திருவள்ளூர் , ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் , ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் வேலையில், தமிழக கடலோரபகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன் படி மழை பெய்து வருகிறது.

திருவள்ளூர் , ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

சென்னையில் நாளை கனமழையும், நாளை மறுநாள் மிக கனமழையும் பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு கடலோரப்பகுதி இலங்கையை ஒட்டி நகர்ந்து வருகிறது.

நீலகிரி , திண்டுக்கல், தேனி  ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள் அதிகனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.