டிராபிக் ராமசாமி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்.....!

Social activist Tropic Ramasamy, who is being treated at the hospital due to ill health due to old age, said his health is very worrying.

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வரும் நிலையில், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி (83), வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமத்திக்கப்பட்டார்.

இந்நிலையில், ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டிராபிக் ராமசாமி உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழக அரசியல் கட்சி தலைவர்களுக்கும், நேர்மையற்ற அரசு அதிகாரிகளுக்கும் சிம்ம சொப்பனமாய் திகழ்ந்தவர் டிராஃபிக் ராமசாமி  குறிப்பிடத்தக்கது..