தூத்துக்குடியில் 100 சதவீதம் இயல்பு நிலை திரும்பி விட்டது : மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

தூத்துக்குடியில் 100 சதவீதம் இயல்பு நிலை திரும்பி விட்டதாகவும், பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் 100 சதவீதம் இயல்பு நிலை திரும்பி விட்டதாகவும், பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீதிமன்ற உத்தரவின் படி 3 சிறப்பு அரசு மருத்துவர்கள், மற்றும் நீதிபதிகள் முன்னிலையில் நேற்று முதல் இன்று அதிகாலை வரை மறு உடற்கூறாய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 5 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் மீதமுள்ள இருவரது உடல்கள் இன்று மாலைக்குள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும், அவர்களது உறவினர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்றும் ஆட்சியர் கூறினார்.