தமிழக கிராமிய கலைகளுடன் தொடங்கியது மாநாடு..! பரை இசையுடன் படையெடுக்கும் தவெக.!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடானது கிராமிய கலையுடன் தொடங்கி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

TVK Maanaadu

விழுப்புரம் :தவெக கட்சியின் முதல் மாநாடானது தற்போது பிரம்மாண்டமாக வி.சாலையில் தொடங்கி இருக்கிறது. முன்னதாக விஜய் நடித்த சுறா படத்தின் ‘வெற்றி கொடிகட்டு பாடல்’ ஒலிக்கப்பட்டது.  மேலும், மாநாடு திடலில் குவிந்துள்ள தொண்டர்கள், ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

அதன் பின், மாநாட்டின் நிகழ்வுகள் கிராமிய கலையுடன் தொடங்கியுள்ள நிலையில், முதன் முதலாக பரை இசையுடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது பலரது கவனத்தையும் இந்த நிகழ்ச்சி ஈர்த்துள்ளது. எளியோருக்கான அரசியலையும், சமநிலை மற்றும் சமத்துவம், கல்வி, சட்டம் என்ற பல்வேறு கோட்பாடுகளை முன் நிறுத்தி அரசியல் பயணத்தை ஆரம்பித்திருக்கும் தவெக தலைவர் விஜய்க்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.