தமிழில் கோவில் குடமுழுக்கு நடத்த கோரிக்கை வைத்தவர்கள் மீது தாக்குதல்.! பாஜகவினர் கைது.!

ஓசூர் கோவிலில் தமிழில் கோவில் குடமுழுக்கு நடத்த கோரிக்கை வைத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பாஜகவினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Arrest

ஓசூர் கோவிலில் தமிழில் கோவில் குடமுழுக்கு நடத்த கோரிக்கை வைத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பாஜகவினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பிரசித்திபெற்ற சந்திரசூடேஷ்வரர் மலைக்கோவில் உள்ளது. இங்கு நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டும் என தமிழ் பேரியக்கத்தினர் அறநிலையத்துறையினரிடம் கோரிக்கை வைத்து அதற்கான ஒப்புதலையும் பெற்றனர்.

இதனை தொடர்ந்து தமிழில் குடமுழுக்கு கோரிக்கை வைத்த தமிழ் தேசிய பேரியக்கத்தினர் மீது சில மர்ம நபர்கள் அண்மையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று மஞ்சுநாத் மற்றும் வினோத் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். அவர்கள் பாஜக ஐடி பிரிவு பிரமுகர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தொடர்ப்புடைய மேலும் மூன்று பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.