சீனாவில் இருந்து வந்த இருவருக்கு தொற்று உறுதி – கிராமத்தில் ஆய்வு..!

By

கொரோனா பாதித்த இருவருக்கும் உடல் ரீதியான தொந்தரவு ஏதும் இல்லாததால் அச்சப்பட தேவையில்லை என சிவகாசி மருத்துவத்துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார். 

சீனாவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை விமான நிலையம் வந்த தாய், மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பி.எஃப்-7 தொற்றா என கண்டறிய சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

இந்த நிலையில் இலந்தைகுளம் கிராமத்தில் சிவகாசி மருத்துவத்துறை துணை இயக்குனர் ஆய்வு மேற்கொள்ளார். இது குறித்த அவர் கூறுகையில், கொரோனா பாதித்த இருவருக்கும் உடல் ரீதியான தொந்தரவு ஏதும் இல்லாததால் அச்சப்பட தேவையில்லை. இரண்டு பேருக்கு கொரோனா உறுதியானதால் அவர்கள் உறவினர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது என தெரிவித்துள்ளார்.

Dinasuvadu Media @2023