குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வாணியம்பாடியில் சுமார் 7000 பேர் ஆர்ப்பாட்டம்!

- குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
- தமிழ்நாட்டில் வாணியம்பாடியில் சஸ்லின் ஜமாத் அமைப்பின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடெங்கிலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. முக்கியமாக வடகிழக்கு மாநிலங்களில் இந்த போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழ்நாட்டிலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆளும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை தவிர மற்ற கட்சிகள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளன.
இந்நிலையில் வாணியம்பாடியில் சஸ்லின் ஜமாத் அமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 7000க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர். இதில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025