வன்னியர் அறக்கட்டளை விவகாரம்: அவதூறாக பேசியது தொடர்பாக ஸ்டாலின் மீது வழக்கு தொடர உள்ளேன்-ராமதாஸ்

Vanniyar Trust case: I am going to sue Stalin for speaking defamation - Ramadoss

வன்னியர் அறக்கட்டளை விவகாரத்தில் அவதூறாக பேசியது தொடர்பாக ஸ்டாலின் மீது வழக்கு தொடர உள்ளேன் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில்  மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.தேர்தலை யொட்டி தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது .அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் , வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர்.

அதேபோல் வேட்பாளர்கள் கடந்த சிலநாட்களாக  வேட்புமனு தாக்கல் செய்தனர்.பின்னர் வேட்புமனு மீதான பரிசீலனையும் செய்யப்பட்டது.ஆனால் இது ஒருபுறம் மறுபுறம் தங்களது கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொரு ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

unknown node

இந்நிலையில் வேலூர் பிரசார கூட்டம் நடைபெற்றது.இதில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ்  பேசினார்.அப்போது கூட்டத்தில் பேசுகையில் ,நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படும்.வன்னியர் அறக்கட்டளை விவகாரத்தில் அவதூறாக பேசியது தொடர்பாக ஸ்டாலின் மீது வழக்கு தொடர உள்ளேன் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.