கட்சி ஆரம்பித்ததை நிறுத்திய விஜயின் தந்தை..! காரணம் இதுதான்..!

SA Chandrasekhar stopped registering the All India Thalapathi Vijay People's party. He has written a letter to the Election Commission not to register the All India Thalapathi Vijay People's party. SA Chandrasekhar has taken this decision as Chairman Padmanathan and Vijay's mother Shoba have resigned

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்வதை நிறுத்தினார் எஸ்.ஏ சந்திரசேகர், மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்ய  வேண்டாம் என தேர்தல் ஆணையத்திற்கு எஸ்.ஏ சந்திரசேகர் கடிதம் எழுதியுள்ளார்.

தனது பெயரை பயன்படுத்த விஜய் எதிர்ப்பு தெரிவித்ததால் கட்சி பணியை தற்காலிகமாக கைவிட்டார். தலைவர் பத்மநாதன், பொருளாளரான விஜய்யின் தாயார் ஷோபா பதவியை ராஜினாமா செய்ததால் இந்த முடிவை எஸ்.ஏ சந்திரசேகர் எடுத்துள்ளார்.

விஜய் மக்கள் இயக்கத்தின் கட்சியாக பதிவு செய்ய நவம்பர் 5-இல் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.