இன்று காலை தமிழக வெற்றிக் கழகம் ஆலோசனை கூட்டம்..!

நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியை கடந்த பிப்ரவரி 2-ம் தேதி தொடங்கினார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கிய பின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின்

Tamilaga Vettri Kazhagam

நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை கடந்த பிப்ரவரி 2-ம் தேதி தொடங்கினார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கிய பின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி மற்றும் சின்னம் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். இதற்கிடையில் கட்சி பெயரில் “க்” என்ற எழுத்து விடுபட்டதாக பலர் விமர்சனம் செய்தனர்.

இதனால் கட்சியின் பெயரில் ‘க்’ என்ற எழுத்து சேர்த்து ‘தமிழக வெற்றிக் கழகம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நேற்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் இன்று காலை 9.00 மணி அளவில் நடைபெற உள்ளது. நமது கழகத்தின் மாவட்டத் தலைமை நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.