விழுப்புரத்தில் உதயசூரியனிலும் சிதம்பரத்தில் தனிச்சின்னத்திலும் விசிக போட்டியிடுகிறது -திருமாவளவன்

This news gives information about Vijika competed in Udayasuriyan and Chidambaram in Villupuram - Thirumavalavan

தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

விழுப்புரத்தில் உதயசூரியனிலும் சிதம்பரத்தில் தனிச்சின்னத்திலும் விசிக போட்டியிடுகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ்  -10, மதிமுக – 1 மக்களவை, 1 மாநிலங்களவை, விசிக – 2, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  – 2, இந்திய கம்யூனிஸ்ட்  – 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி -1, ஐஜேகே – 1 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அதேபோல் திமுக 20 தொகுதிகளில் போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னர்  திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விபரம்  வெளியானது.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார்.விழுப்புரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார் போட்டியிடுகிறார்.

இதன் பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுகையில், விழுப்புரத்தில் உதயசூரியனிலும் சிதம்பரத்தில் தனிச்சின்னத்திலும் விசிக போட்டியிடுகிறது. வைரம் சின்னம் கேட்டோம், தரவில்லை.பலாப்பழம் சின்னம் கேட்டோம் தரவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.