"துப்பறிவாளன் 2 " படத்தின் படப்பிடிப்பிற்கு வந்த சோதனை...?

Filming for Detective 2, directed by actor Vishal and starring himself, has been put on hold due to a curfew in London.

நடிகர் விஷால் இயக்கத்தில் அவரே நடிக்கும் துப்பறிவாளன் 2 திரைபடத்திற்கான படப்பிடிப்பு லண்டனில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் திரைப்படம் மாபெரும் வெற்றி கண்டது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அந்த வெற்றியை தொடர்ந்து துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக படக்குழு அறிவித்தனர். மேலும் படத்திற்க்கான படப்பிடிப்பு லண்டனில் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், திடீரென இயக்குனர் மிஸ்கின் மற்றும் விஷால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக இயக்குனர் மிஸ்கின் படத்திலிருந்து விலகினார்.

மேலும் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வந்த நிலையில் மிஸ்கின் விலகினார். அடுத்ததாக  நடிகர் விஷால் இந்தப் திரைப்படத்தை இயக்குவார் என அறிவித்தார். அதன் பின் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக படத்தின் படப்பிடிப்புகள் எதுவும் தொடங்கவில்லை.இந்த நிலையில் தற்போது, நீண்ட நாட்களுக்கு பிறகு லண்டனில் படத்தின் படப்பிடிப்பு நடத்தலாம் என விஷால் முடிவெடுத்து படப்பிடிப்பிற்காக தயாராகி இருந்தார். ஆனால் தற்போது அங்கு கொரோனா வைரஸ் பரவல் வேகமாக பரவி வருவதன் காரணத்தால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அது மட்டுமில்லாமல் இங்கிலாந்திலிருந்து இந்தியா வரும் விமானங்கள் எல்லாம் முடக்கப்பட்டு விட்டதால் அங்கு செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.