மதுரையில் எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தை பார்வையிட்ட மத்தியக்குழுவினர்!

மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை மத்திய குழுவினரும் மற்றும் ஜப்பானில் இருந்து வந்திருந்த சிறப்புக் குழுவினரும் இன்று

மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை மத்திய குழுவினரும் மற்றும் ஜப்பானில் இருந்து வந்திருந்த சிறப்புக் குழுவினரும் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.கடந்த ஜனவரி மாதம் தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டிய நிலையில் மத்திய அரசின் சார்பில் நிதியும் ஒதுக்கப்பட்டது. மாநில அரசிடம் 202 ஏக்கர் இடமும் கேட்கப்பட்டிருந்தது.மத்திய அரசு கேட்டிருந்த நிலத்தை இன்னும் ஓரிரு நாளில் ஒப்படைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.இந்நிலையில்,இன்று ஆய்வு நடந்துள்ளது.எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்க 48 மாதங்கள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.