தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம் – விசிக தலைவர் திருமாவளவன்

Thol Thirumavalavan has stated that Viduthalai Chiruthaigal Katchi (VCK) will contest in the DMK alliance.2021 Assembly Election.

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனிச்சின்னத்தில்தான் போட்டியிடும் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை சந்தித்து பேசியபின் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனி சின்னத்தில் தான் போட்டியிடும் என்று அறிவித்தார். திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தனி சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளது என்று கூறியுள்ளார்.

இதற்குமுன்பு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மதிமுகவின் தனித் தன்மை காக்கப்பட வேண்டும் என்பதற்காக வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம். உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என யாரும் எங்களை வலியுறுத்தவில்லை என தெரிவித்திருந்தார். தற்போது விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர் வருகின்ற 2021 சட்டபேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.