விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் 6-வது சீசன் நிகழ்ச்சி தொடங்கி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பலரும் தங்களுக்கு பிடித்த நபர்களுக்கு வாக்களித்து போட்டியில் இருப்பவர்களை காப்பாற்றி வருகிறார்கள்.
இன்னும் சில நாட்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடையவுள்ள நிலையில், பலரும் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களுக்கு வாக்களிங்கள் என இணையத்தில் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
அந்த வகையில், விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் டிவிட்டரில் விக்ரமனுக்கு வாக்களிங்கள் என்ற கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக தொல் திருமாவளவன் அவர்கள் டிவிட்டரில் கூறியதாவது ” தம்பி விக்ரமன் அவர்களை வெற்றிபெறச் செய்வோம். பிக்பாஸ் தேர்வுக்கான போட்டியில் ஹாட்ஸ்டார் -ஆப் மூலம் விக்ரமனுக்கு வாக்களிப்போம்” என பதிவிட்டுள்ளார்.
unknown node