அதிமுக வெளிநடப்பு.! சட்டப்பேரவை கதவுகளை மூடி தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு...

அதிமுக வெளிநடப்பு செய்த நிலையில், சபாநாயகர் உத்தரவின் பேரில் சட்டப்பேரவை கதவுகளை மூடி ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு.

அதிமுக வெளிநடப்பு செய்த நிலையில், சபாநாயகர் உத்தரவின் பேரில் சட்டப்பேரவை கதவுகளை மூடி ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு.

ஆளுநர் செயல்பாடுகளுக்கு எதிராக, தமிழக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வரப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஆளுநர் செயல்பாடுகள் குறித்த தீர்மானமனத்தை அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்தார்.

இந்த தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு தொடங்கும் முன்னரே அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினர். அதன் பிறகு தனித்தீர்மானம் மீது வாக்கெடுப்பை சபாநாயகர் அப்பாவு நடத்தினர். அப்போது விதிகளின் படி சட்டப்பேரவை கதவுகள் மூடப்பட்டது.

2017ஆம் ஆண்டுக்கு பிறகு எண்ணிக்கணிக்கும் முறையில் சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. எண்ணி கணிக்கும் வாக்கு முறைய  சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். மேலும், ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் எதுவும் கொண்டு வரக்கூடாது என்ற விதியை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.