வி.வி.மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடிக்கு மேல் வரிஏய்ப்பு..!ரூ.8 கோடி பறிமுதல் ...!வருமான வரித்துறை அதிரடி

வைகுண்டராஜனின் வி.வி.மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடிக்கு மேல் வரிஏய்ப்பு செய்துள்ளது.

வைகுண்டராஜனின் வி.வி.மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடிக்கு மேல் வரிஏய்ப்பு செய்துள்ளது.

தமிழகத்தில் சமீப காலமாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்ற வண்ணமே உள்ளது.

திருநெல்வேலி  மாவட்டம், திசையன்விளையைச் சேர்ந்தவர் வைகுண்டராஜன்.இவரது வி.வி.மினரல்ஸ் நிறுவனம், கடந்த 25 ஆண்டுகளாக தூத்துக்குடி கடற்கரையோரத்தில் தாதுமணலைப் பிரித்தெடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

unknown node

அக்டோபர் 25 ஆம் தேதி  வி.வி.மினரல்ஸ் நிறுவனம் மற்றும் உரிமையாளர் வைகுண்டராஜன் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றது. கடந்த 3 ஆண்டுகளாக முறையாக வருமான வரி செலுத்தாத காரணத்தால் வருமான வரித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.

இந்நிலையில் வி.வி மினரல்ஸ்க்கு சொந்தமான இடங்களில் 6 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்றது. வைகுண்டராஜனின் நிறுவனத்திற்கு சொந்தமான  இடங்களில் 6 நாட்களாக  வருமானவரி சோதனை நடைபெற்றது.

இந்நிலையில் வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் ரூ.8 கோடி பறிமுதல்  செய்யப்பட்டுள்ளது என்று  வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அதேபோல் வைகுண்டராஜனின் வி.வி.மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடிக்கு மேல் வரிஏய்ப்பு செய்துள்ளது என்றும்  வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.