ஈபிஎஸ் அழைப்பின் பேரில் அவரது இல்லம் செல்கிறோம் - லீமா ரோஸ்

புதுச்சேரி சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சென்னை புறப்பட்டனர்

Hero Image

சென்னை : தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் சூழ்நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுள்ளனர். அனைவரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கச் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லால்குடி சட்டமன்ற உறுப்பினர் திருமதி. லீமா ரோஸ் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தபோது, “தலைவர் ஈபிஎஸ் அழைப்பின் பேரில், அவரது இல்லம் செல்கிறோம்” என்று தெரிவித்தார். புதுச்சேரியில் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னைக்கு புறப்பட்டதாகவும், அங்கு எடப்பாடி பழனிசாமியை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஒரு செய்தியாளர் “என்ன முடிவு எடுத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டதற்கு, லீமா ரோஸ் “நல்ல முடிவு தெரியும் உங்களுக்கு. தலைவர் சொல்லுவாங்க” என்று பதிலளித்தார். மேலும் “சேர்வாங்க, சேர்வாங்க. தலைவர் சொல்லுவாங்க” என்றும், “இல்ல வரச் சொல்லியிருக்காங்க தலைவர்” என்றும் திரும்பத் திரும்ப உறுதிப்படுத்தினார்.

மேலும், அதனைத்தொடர்ந்து, அதிமுக ஆளுநரை சந்திக்கப் போகிறதா என்ற கேள்விக்கு, “ஆமாங்க, ஆமாங்க, ஆமாங்க” என்று பதிலளித்த லீமா ரோஸ், தொடர்ந்து “நன்றி, நன்றி, நன்றி” என்று கூறி பேட்டியை முடித்தார்.