சட்டப்பேரவைக்கு இடைஞ்சல் கொடுத்தால் வேடிக்கை பார்க்க மாட்டோம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

சட்டப்பேரவைக்கு இடைஞ்சல் தர நினைத்தால் அதை வேடிக்கை பார்க்க மாட்டோம் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

சட்டப்பேரவைக்கு இடைஞ்சல் தர நினைத்தால் அதை வேடிக்கை பார்க்க மாட்டோம் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

ஆளுநர் செயல்பாடுகளுக்கு எதிராக, தமிழக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வரப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஆளுநர் செயல்பாடுகள் குறித்த தீர்மானமனத்தை அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்தார். அதனை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் உரையாற்றினார்.

கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம்:

ஆளுநர் கருத்துகளுக்கு பதிலுக்கு பதில் சொல்லி சட்டமன்றத்தை அரசியல் மன்றமாக மாற்ற விரும்பவில்லை, ஆனால் சட்டமன்றத்துக்கு அரசியல் நோக்கத்தோடு இடைஞ்சல் தர ஆளுநர் நினைத்தால் அதை வேடிக்கை பார்க்க மாட்டோம் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

ஆளுநர் விஸ்வாசம் குறித்து முதலமைச்சர் பேச்சு:

ஆளுநருக்கு அரசியல் சட்டம் தெரியவில்லை என நான் கூற மாட்டேன். ஆனால், அவரது அரசியல் விஸ்வாசம், அரசியல் சட்ட விஸ்வாசத்தை விழுங்கிவிட்டது. அதனால் தான், உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும் மீறி அரசின் அமைச்சரவை கொள்கைகளை மீறி பொதுவெளியில் பேசுகிறார் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.