வீணடிக்கப்படுவது மக்களின் வரிப்பணம் தான்! அரசின் பணம் அல்ல – மு.க.ஸ்டாலின்

Government advertisements in newspapers are printed on many pages. All the money spent on this is people's tax money.

செய்தி தாள்களில் அரசின் விளம்பரங்கள் பல பக்கங்களில் அச்சடிக்கப்படுகிறது. இதற்காக அரசு பல கோடிகளை செலவு செய்கிறது. இவை அனைத்து மக்களின் வரிப்பணம் தான்.

இராணிப்பேட்டை, அனந்தலை ஊராட்சியில் மக்கள் கிராம சபை கூட்டம் தொடங்கியுள்ளது.  இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றி வருகிறார். இந்த கூட்டம் நடைபெறும் இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.

அப்போது பேசிய அவர், செய்தி தாள்களில் அரசின் விளம்பரங்கள் பல பக்கங்களில் அச்சடிக்கப்படுகிறது. இதற்காக அரசு பல கோடிகளை செலவு செய்கிறது. இவை அனைத்து மக்களின் வரிப்பணம் தான். ஆகவே விளம்பரங்களுக்காக வீணடிக்கப்படும் பணம் மக்களின் வரிப்பணம் தான். அரசின் பணம் அல்ல என குற்றசாட்டியுள்ளார்.