பொதுத்தேர்வுகள் எப்போது நடைபெறும்? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

The date of the public exam will be announced after the announcement of the date of the assembly elections, said Minister Sengottaiyan.

சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு வெளியானபின் பொதுத் தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் பகுதி மக்களுக்கு தமிழக அரசு சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு, அப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது பேசிய அவர், பொதுத்தேர்வுக்கான அட்டவணை தயார் நிலையில் உள்ளதாக கூறினார். ஆனால் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதியின் அறிவிப்பு வெளியான பின்பு தான் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என அமைச்சர் தெரிவித்தார். மேலும், பள்ளிகளில் வாக்கு சாவடிகள் அமையவுள்ளதால், தேர்தல் அறிவிப்பை பொறுத்தே பொதுத்தேர்வுக்கான தேதிகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.