காங்கிரஸ், தேமுதிக, விசிகக்கு எந்த தொகுதிகள்? – முழு பட்டியல் வெளியீடு!

திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Hero Image

சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், தேமுதிக, விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

திமுகவின் சட்டமன்றப் பேச்சுவார்த்தைக் குழுத் தலைவரும், கட்சியின் பொருளாளருமான டி.ஆர். பாலு, கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் பட்டியலை வெளியிட்டார். இதில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட முக்கிய தொகுதிகள்:

பொன்னேரி (தனி), திருப்பெரும்புதூர் (தனி), சோழிங்கர், உத்தமண்டலம், ரோடு கிழக்கு, அரந்தாங்கி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகாசி, திருவாடானை, திருவைகுண்டம், நாங்குநேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், வேளச்சேரி, ஊத்தங்கரை (தனி), துறையூர் (தனி) கவுண்டம்பாளையம், ஆத்தூர் (தனி), பென்னாகரம், சிங்காநல்லூர், அம்பாசமுத்திரம், கிருஷ்ணகிரி, உசிலம்பட்டி, சங்கரன்கோவில், மேனூர்,உள்ளிட்ட 28 தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

தேமுதிக

விருத்தாசலம், விருதுநகர், தருமபுரி, குடியாத்தம் (தனி), சேலம் மேற்கு, போளூர், பல்லாவரம், திருத்தணி, ஓமலூர், மைலம் ஆகிய 10 தொகுதிகள்.

ம.தி.மு.க: மொக்குறிச்சி, மதுரை தெற்கு, கடையநல்லூர், சீக்காழி (தனி – தனிச் சின்னம்) உள்ளிட்ட 4 தொகுதிகள்.


இந்திய யூனியன் முஸ்லிம் லீக்: பாபநாசம், வாணியம்பாடி,


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி: தளி, திருத்துறைய்பூண்டி (தனி), திருவில்லிபுத்தூர் (தனி), திருப்பூர் வடக்கு, பவானிசாகர் (தனி) ஆகிய 5 தொகுதிகள்.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி: கீழ்வேளூர் (தனி), கந்தர்வகோட்டை (தனி), பத்மநாபபுரம், பழனி, திருவொற்றியூர் ஆகிய 5 தொகுதிகள்.


விடுதலை சிறுத்தைகள் கட்சி:

காட்டுமன்னார்கோவில் (தனி), செய்யூர் (தனி), திருப்போரூர், அரக்கோணம் (தனி), திண்டிவனம் (தனி), பெரியகுளம் (தனி), கள்ளக்குறிச்சி (தனி), பன்னூட்டி


மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள்:


கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (உதயசூரியன்): திருச்செங்கோடு, பொள்ளாச்சி


மனித நேய மக்கள் கட்சி (உதயசூரியன்): நாகப்பட்டினம், மணப்பாறை


முக்குலத்தோர் புலிப்படை (உதயசூரியன்): சிவகங்கை


மனிதநேய ஜனநாயக கட்சி (உதயசூரியன்): சிதம்பரம்


எஸ்.டி.பி.ஐ (உதயசூரியன்): நன்னிலம்


தமிழர் தேசம் கட்சி (உதயசூரியன்): நத்தம்


கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (உதயசூரியன்)


திருச்செங்கோடு, பொள்ளாச்சி