நீங்கெல்லாம் ஏன் கவலைப்படுறீங்க., ரஜினியை போல் தான் சசிகலாவும் – எச் ராஜா பேட்டி

H. Raja said in a press conference that Sasikala is like Rajini in politics.

அரசியலில் ரஜினியை போல் தான் சசிகலாவும் என்று எச் ராஜா செய்தியாளர்கள் பேட்டியின் போது தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எச் ராஜா, அரசியல் ரீதியாக நான் இந்த நிலைப்பாட்டை எடுக்கவுள்ளேன் என்று சசிகலா அவர்களே சொல்லாத போது, அவர் வாய் திறந்து இதுவரை பேசாத போதும், நீங்கெல்லாம் ஏன் ரொம்ப கவலைப்படுறீங்க என்று கூறியுள்ளார். இப்படித்தான் ரஜினிகாந்த், ரஜினிகாந்த் என்று அனைவரும் கூறிக் கொண்டே இருந்திங்க, கடைசில் அவர் என்ன சொன்னார். நான் அரசியலுக்கு வரவில்லை என்று தெரிவித்தார்.

பின்னர் எதுக்கு நீங்களும் நானும் இதுகுறித்து தேவையில்லாமல் விவாதிக்க வேண்டும் என்று செய்தியாளர்களை பார்த்து தெரிவித்துள்ளார். முதலில் சசிகலா அவர்களுடைய நிலைப்பாட்டை அறிவிக்கட்டும். பின்னர் அவர்களின் நிலைப்பாட்டை பொறுத்தே எதிர்கால அரசியல் அமையும் என குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.