ஒரு வாரத்தில் மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி!

ஒரு வார காலத்தில் மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அமைச்சர் ஐ பெரியசாமி அறிவிப்பு.

ஒரு வார காலத்தில் மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அமைச்சர் ஐ பெரியசாமி அறிவிப்பு.

சென்னை ராயபுரத்தில் கூட்டுறவு வங்கியின் புதிய கிளை திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஐ பெரியசாமி, தமிழக முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனே, 2750 கோடி ரூபாய் மகளிர் சுய உதவிக் கடனைத் தள்ளுபடி செய்து பல லட்சம் பெண்கள் பயனடையும் வகையில் நடவடிக்கை எடுத்தார். நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டது போல் இன்னும் ஒரு வார காலத்தில் மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி செய்து அதற்கான ரசீது வழங்கப்படும்.

மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடியில் தகுதியானவர்கள் யாராக இருந்தாலும் தள்ளுபடியை பெற்றுக்கொள்ளலாம். சுய உதவி குழு கடனை தள்ளுபடி செய்வது தொடர்பாக கணக்கிடும் பணிகள் நடந்து வருகிறது. தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும். தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், மகளிர் சார்ந்த திட்டங்களுக்கே அதிக முன்னுரிமையும், முக்கியத்துவத்தையும் கொடுத்து வருகிறார். சுய உதவி குழு கடன் மட்டுமல்லாமல் பெண்கள் எந்தவித கடன் கேட்டு வந்தாலும் அவர்களுக்கு கடன் கொடுக்க மத்திய கூட்டுறவு வங்கி தயாராக இருக்கிறது எனக் கூறினார்.