நேற்று 33-வது ஜிஎஸ்டி கவுன்சில் குழு கூட்டம் நடைபெற்றது.
33-வது ஜிஎஸ்டி கவுன்சில் குழு கூட்டத்தில் 380-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு வரி விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ரூ 20 லட்சம் முதல் ரூ40 லட்சம் மதிப்பிலான சிறு, குறு தொழிலில் ஈடுபடுபவர்கள் ஜிஎஸ்டி வரி கட்ட தேவையில்லை.இணக்க வரி வர்த்தகர்களுக்கு ரூ 1.5 கோடி வரை 1% ஜிஎஸ்டி வரி, உற்பத்தியாளர் என்றால் 1.5% வரி ஆகும்.33-வது ஜிஎஸ்டி கவுன்சில் குழு கூட்டத்தில் 380-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு வரி விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அரசியலில் நேற்று, இன்று, நாளை என சூழ்நிலை மாறி வருகிறது. காலத்தின் தேவை நிரந்தர ஆட்சி அமைக்க கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களை பின்நோக்கி பார்க்க முடியாது. காலத்துக்கேற்ப கூட்டணி அமையும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.