கோட்டைக்கு மட்டுமல்ல முதல்வர் அறைக்கே நீங்கள் வரலாம் – முக ஸ்டாலின் உறுதி

Stalin has assured the people that if the DMK comes to power and the grievances are not resolved, the Chief Minister can come to the room and ask.

திமுக ஆட்சிக்கு வந்து குறைகள் தீர்க்கப்படாவிட்டால் முதல்வர் அறைக்கே வந்து கேட்கலாம் என்று முக ஸ்டாலின் மக்கள் மத்தியில் உறுதி அளித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் உங்கள் தொகுத்தல் ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்ட திமுக தலைவர் முக ஸ்டாலின், மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பின்னர் மக்கள் முன்னிலையில் பேசிய அவர், கோரிக்கை அளிப்பவர்களிடம் அடையாள அட்டை வழங்கப்படும். அந்த அட்டையும், அதில் உள்ள பதிவு எண்ணும் மிக முக்கியம் என்று கூறியுள்ளார். ஏனென்றால், வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் மக்களின் குறைகள் தீர்க்கப்படும்.

அப்படி தீர்க்கவில்லை என்றால், அதனை தட்டி கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டு என தெரிவித்துள்ளார். ஆகவே, எங்களின் குறைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்று கூறுவதற்கு, அந்த அடையாள வைத்திருந்தால் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மட்டுமல்ல அங்குள்ள முதல்வர் அறைக்கே வரலாம். அந்த உரிமை இந்த அட்டைக்கு இருக்கு என்று உறுதி அளித்துள்ளார். இதனால் கோரிக்கை மனு அளித்தவர்கள் மறக்காமல் அந்த அடையாள அட்டையை வாங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.