டிசர்ட்டில் அழகிரி,இருந்தாலும் ஸ்டாலினுடன் செல்பி எடுத்த வாலிபர்!

this news given information about Young guy with Stalin

வாலிபர் ஒருவர் ஸ்டாலினுடன் செல்பி எடுத்திருந்தவர்  அணிந்திருந்த டி-சர்ட்டில் மு.க.அழகிரியின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

தேர்தல் நெருங்கிவருகின்ற நிலையில், தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் , வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர்.

அனைத்து கட்சிகளும் மிக தீவிரமாக பிரச்சாரம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் தங்களது கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொரு ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

திமுக சார்பாக அதன் முக்கிய தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆ.ராசா உள்ளிட்டோர்  தங்களது கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

கடந்த 20 ஆம் தேதி திருவாரூரில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஸ்டாலின்.

unknown node

இந்நிலையில் இன்று  மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து மாட்டுத்தாவணியில் நடைபயணமாக சென்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.அந்த சமயத்தில் பலர் ஸ்டாலினுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.அப்போது அங்கிருந்த வாலிபர்  ஒருவர் ஸ்டாலினுடன் செல்பி எடுத்தார்.ஆனால் அவர் அணிந்திருந்த டி-சர்ட்டில் மு.க.அழகிரியின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அதேபோல்  மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக மதுரை தொகுதியில் போட்டியிடும் எழுத்தாளர் சு.வெங்கடேசன் முன்னாள் மத்திய இணை அமைச்சர் மு.க.அழகிரியை சந்தித்து ஆதரவு கோருவேன்  குறிப்பிடத்தக்கது.