கோகுல்ராஜ் கொலை குற்றவாளி யுவராஜ் வேறு ஒரு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்.!

கோகுலராஜ் கொலை வழக்கில் தண்டனை பெற்று கோவை சிறையில் உள்ள யுவராஜ், நீதிபதியை அவதூறாக பேசிய வழக்கில் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கோகுலராஜ் கொலை வழக்கில் தண்டனை பெற்று கோவை சிறையில் உள்ள யுவராஜ், நீதிபதியை அவதூறாக பேசிய வழக்கில் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கடந்த 2015ஆம் ஆண்டு கோகுல்ராஜ் எனும் பொறியியல் பட்டதாரியை கொலை செய்த வழக்கில், யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு யுவராஜ் கோவை மத்திய சிறையில் தண்டனை பெற்று வருகிறார்.

இந்நிலையில், ஏற்கனவே நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது நீதிபதியை அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றதை தொடர்ந்து கோவை சிறையில் இருந்து  நாமக்கல் நீதிமன்றத்தில் மேற்கண்ட வழக்கிற்காக ஆஜர் படுத்தப்பட்டார்.