அறந்தாங்கி சிறுமி கொலை.."நெஞ்சை பதறச் செய்கிறது" கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – முதல்வர்

அறந்தாங்கியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை குறித்து முதல்வர் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

அறந்தாங்கியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை குறித்து முதல்வர் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் காணாமல் போன அறந்தாங்கியைச் சேர்ந்த 7 வயது சிறுமியின் உடல் வறண்ட குளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் உடல் ரத்த காயங்களுடன் கிடந்தது. இதைத்தொடர்ந்து, விசாரணையில் சிறுமிபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்தது தெரிய வந்தது. இந்நிலையில், பிரேத பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த  வழக்கை தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்நிலையில் ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நெஞ்சை பதறச் செய்கிறது.இந்த கொடூடர செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என தனது ட்வீட்டர் பக்கத்தில் முதலமைச்சர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

unknown node
அறந்தாங்கி சிறுமி கொலை.."நெஞ்சை பதறச் செய்கிறது" கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – முதல்வர்