உக்ரைனில் ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டு உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் பலியாகியுள்ளனர்.
உக்ரைனில் கீவ் நகரில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றின் மேற்கூரையின் மீது ஹெலிகாப்டர் மோதி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இதில் உக்ரைன் உள்துறை அமைச்சர் உயிரிழந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில் மேலும் 22 பேர் காயமடைந்துள்ளனர். ரஷ்யா – உக்ரைன் நாட்டிற்கு இடையே போர் நடந்து வரும் சூழலில் ஹெலிகாப்டர் விபத்தில் உள்துறை அமைச்சர் உயிரிழந்த விவகாரம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.