பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் இராணுவ தலைமையகம் உள்ளது. அதன் அருகே நேற்று முன்தினம் காலை சிறிய ரக விமானம் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென மொராகலூ கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் அந்த சிறிய ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.
unknown nodeஇந்த விபத்தில் இரண்டு விமானிகள் , 3 ராணுவ வீரர்கள் என 17 பேர் இறந்தனர். மேலும் 6 வீடுகள் எரிந்து சாம்பலானது. இந்த விபத்தில் காயமடைந்த 12 பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது குறித்து ராவல்பிண்டி மாவட்ட ஆணையர் அலி ரண்தாவா கூறுகையில் , பயிற்சியில் ஈடுபட்டு இருந்த இந்த சிறிய ரக விமானம் அதிகாலை 2.30 மணி முதல் 2.40 மணிக்குள் விபத்துக்கு உள்ளானது.
unknown nodeவிமானிகள் உட்பட ஐந்து இராணுவ வீரர்கள் இறந்தனர். மேலும் பொதுமக்கள் 12 பேர் இறந்து உள்ளனர் என கூறினார். விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் என கூறினார்.