இத்தாலியில் 20 மாடி கட்டிடத்தில் பற்றி எரிந்த தீ – வைரல் வீடியோ உள்ளே...!

A 20-storey building has caught fire in Milan, Italy.

இத்தாலியிலுள்ள மிலன் நகரில் 20 மாடி கட்டிடம் ஒன்று தீ பிடித்து எரிந்துள்ளது.

இத்தாலியிலுள்ள மிலன் நகர் எனும் பகுதியில் 60 மீட்டர் உயரமுள்ள 20 மாடி கட்டிடம் ஒன்றின் 15-வது தளத்தில் திடீரென தீ பற்றி எரிந்தது. இந்த தீ மளமளவென பரவியதும், கட்டிடம் முழுவதும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இந்நிலையில் இது குறித்து உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர். மேலும் கட்டிடத்திற்குள் இருந்த இருபதுக்கும் அதிகமானோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும் தொடர்ந்து தீ பரவி வந்ததால், அடுக்குமாடி கட்டடத்திற்குள் சென்று தீயை அணைக்கும் பணியை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தீ விபத்தில் யாரேனும் சிக்கி இருக்கிறார்களா? உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்த விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இது குறித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

unknown node