இங்கிலாந்தில் இருந்து பாகிஸ்தான் திரும்பிய 3 பேருக்கு கொரோனா உறுதி.!

The new coronavirus strain found in the United Kingdom has now been reported in Pakistan. The strain was identified in three samples taken

இங்கிலாந்தில் முதன்முதலில் வெளிவந்த புதிய வகை கொரோனா வைரஸ்  தொற்று பாகிஸ்தானில் கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு சிந்து சுகாதாரத் துறை அறிக்கையின்படி, இங்கிலாந்தில் திரும்பி வந்தவர்களின் 12 கொரோனா மாதிரிகளை சோதித்தனர். அதில், மூன்று பேருக்கு கொரோனா முதல் கட்டத்தில் வைரஸின் புதிய மாறுபாட்டை கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு குறித்த அச்சத்தில் நேற்று, இங்கிலாந்திலிருந்து வரும் விமான சேவை தடையை பாகிஸ்தான் மற்றொரு வாரத்திற்கு நீட்டித்தது.

அறிக்கையின் படி,தற்காலிக விசாக்களில் இங்கிலாந்துக்குச் சென்ற பாகிஸ்தான் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் நாட்டிற்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள், ஆனால் கட்டுப்பாடுகளின்படி விமானத்திற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனாபரிசோதனையைக் காட்ட வேண்டும்.