சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள குயிஸ்ஹா மாகாணத்தில் உள்ள லியு பன்ஷுய் நகரில் உள்ள மலை கிராமத்தில் கடந்த வாரம் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு கனமழை பெய்தது. இந்த மழையால் அப்பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் விழுந்தன.அவற்றில் 23 வீடுகள் மண்ணுக்குள் புதைந்ததாக அவற்றில் 11 பேர் வரை உயிருடன் மீட்கப்பட்டதாகவும் மீட்பு பணி குழுவினர் கூறியுள்ளனர்.
unknown nodeநிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக இருந்தது. தற்போது 33 ஆக உயர்ந்துள்ளது.இந்த நிலச்சரிவில் ஏராளமானோர் காணாமல் போனதாகவும் ,இடிபாடுகளில் பலர் சிக்கி உள்ளதாகவும் அவர்களை மீட்டும் பணி தீவிரமாக நடந்து வருவதாக மீட்பு பணி குழுவினர் கூறியுள்ளனர்.