ஆப்கானிஸ்தானில் போலியோ தடுப்பூசியை செலுத்தும் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு – 4 பேர் உயிரிழப்பு!

A polio vaccination camp was held in Afghanistan. Four people were killed in the shooting by gunmen who arrived there at the time.

ஆப்கானிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து போடும் முகாம் நடைபெற்றது.

அப்போது அங்கு வந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலாலாபாத் என்னும் நகரில் இன்று போலியோ தடுப்பூசி வழங்கக்கூடிய ஊழியர்கள் முகாம் அமைத்து போலியோ தடுப்பூசி செலுத்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் அந்த இடத்திற்கு வந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் அங்கிருந்த 3 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், இந்த தாக்குதலில் போலியோ தடுப்பூசி செலுத்த சென்றிருந்த ஊழியர்களும் 4 பேர் உயிரிழந்துள்ளனர் எனகாவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இன்று மட்டும் ஜலாலாபாத் நகரின் 3 இடங்களில் துப்பாக்கி ஏந்தியவர்கள் போலியோ தொழிலாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக போலியோ நோய்த்தடுப்பு இயக்கத்தின் தலைவர் டாக்டர் ஜான் முகமது அவர்கள் கூறியுள்ளார். மேலும் இந்த தாக்குதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.