அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் நடத்த துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (திங்கள்) அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு முக்கிய விவசாய பகுதியில் அதிகாலை 3.30 மணி அளவில் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது.
இந்த துப்பாக்கி சூட்டில் 6 மாத குழந்தை 17வயது தாய் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி போலீசார் விசாரிக்கையில், இந்த துப்பாக்கி சூடானது, போதை மருந்து கடத்தல் கும்பலோடு தொடர்புடையது எனவும் 2 பேர் இந்த தாக்குதலை நடத்தினர் எனவும் கூறியுள்ளனர்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் உயிர் பிழைத்து இருந்தார் எனவும் ஆனால் அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார் எனவும், பெரும்பாலும் உயிரிழந்தவர்களின் தலையில் தான் குண்டு பாய்ந்துள்ளது எனவே தாக்குதல் குறிவைத்து தான் நடத்தப்பட்டுள்ளது எனவும் தகவல் தெரியவந்துள்ளது.