ஐ.நா. அழைப்பை ஏற்று சூடான் துணை ராணுவப் படைகள் 72 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது.
சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையேயான மோதலில் பலி எண்ணிக்கை 300-ஐ கடந்துள்ளது. கடந்த சில நாட்களாக போர் நீடித்துவரும் நிலையில், ரம்ஜான் பண்டிகைக்காக அடுத்த 72 மணி நேரத்திற்கு போரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.
unknown nodeசூடானில் ராணுவ மோதல்:
சூடான் நாட்டில் ராணுவத்துக்கும், துணை ராணுவ ஆதரவு படையினருக்கும் இடையே கடந்த சில நாட்களாகவே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த மோதலில், துப்பாக்கிச் சூடு மற்றும் வான்வழி தாக்குதல்கள் ன பல கலவரங்கள் நடந்தது. அதாவது, சக்தி வாய்ந்த துணை ராணுவக் குழுவான ஆர்எஸ்எஃப்-ன் (RSF) நடவடிக்கைகள் ஒருங்கிணைப்பு இல்லாமல் நடந்ததாகவும், இது சட்டவிரோதமானவை என்று ராணுவம் கூறிய நிலையில், சூடானில் இந்த ராணுவ மோதல் நிலவி வருகிறது.
unknown nodeஇந்தியர் உயிரிழப்பு:
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மோதலில் கிட்டத்தட்ட 350 பேர் உயிரிழந்துள்ளனர். 3,000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அதில் கேரளாவைச் சேர்ந்த ஆல்பர்ட் அகஸ்டீன் என்ற இந்தியர் ஒருவர் அடங்குவர்.
unknown nodeஐ.நா. போர் நிறுத்த அழைப்பு:
இந்தப் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. அந்த வகையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், ரம்ஜான் பண்டிகைக்காக பொதுமக்கள் பாதுகாப்பாக செல்ல நேற்று போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தார். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சூடான் ராணுவமும், துணை ராணுவப்படையும் இந்த அழைப்பினை ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படி, அந்நாட்டு உள்ளூர் நேரப்படி (0400 GMT) காலை 6 மணி முதல் 72 மணி நேர மனிதாபிமான போர் நிறுத்தத்தை அறிவித்தது.
unknown nodeசாட் நாட்டில் தஞ்சம்:
இதற்கிடையில், ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனம் (UNHRC) மற்றும் உலக உணவு திட்டம் (WFP) 10,000 முதல் 20,000 பேர் வரை அண்டை நாடான சாட் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்று கூறியுள்ளது.