டெக்சாஸ் மாலில் பயங்கர துப்பாக்கி சூடு.! குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு...

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் வணிக வளாகத்தில் புகுந்து மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் வணிக

Texas mall shooting

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் வணிக வளாகத்தில் புகுந்து மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் வணிக வளாகத்தில் இருந்த குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் பலர் காயமடைந்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஏழு பேர் காயமடைந்தனர் என்றும் அவர்கள் உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்திய ஒருவரை காவல்துறை சுட்டுக்கொன்ற நிலையில், மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

நேற்று பிற்பகல் 3:30 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கிச்சூட் சத்தத்தை கேட்டு அருகில் இருந்த மக்கள் ஒட்டம் பிடித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

unknown node