தென்னாப்பிரிக்கா: ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள விமானம் ஒன்று வானத்தில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தை ஓட்டிக்கொண்டிருந்த விமானியின் இருக்கைக்கு அடியில், விஷமுள்ள நாகப்பாம்பு ஒன்று தலையை தூக்கி படமெடுத்ததை கண்டு அலறிய விமானி ருடால்ஃப் எராஸ்மஸ், பாதுகாப்புக்காக அவசரமாக தரையிறக்கப்பட்டதற்காக பாராட்டுகளை பெற்றார்.
இது குறித்து அந்த விமானி கூறுகையில், கடந்த திங்கட்கிழமை காலை நான்கு பயணிகளுடன் ஒரு சிறிய விமானத்தில் வொர்செஸ்டரில் இருந்து நெல்ஸ்ப்ரூட் வரை பறந்து கொண்டிருந்ததாக கூறினார். முன்னதாக, வொர்செஸ்டர் விமானநிலையத்தில் உள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் விமானத்தின் இறக்கைக்கு அடியில் ஒரு நாகப்பாம்பு கிடப்பதைக் கண்டதாக எங்களிடம் கூறினார்கள்.
பின்னர் அவர்கள் அதைப் பிடிக்க முயன்றபோது, துரதிஷ்டவசமாக அது இன்ஜின் உள்ளெ சென்றதாகவும், அதனை திறந்து பார்த்த பொழுதும் அந்த பாம்பு அங்கு இல்லை, உடனே வெளியே சென்றதாக கூறினார்கள். அந்த தைரியத்தில், தான் நான் திங்கட்கிழமை விமானத்தை இயக்கினேன், இறுதியில் அது என் கண்ணுக்கு தென்படும் என்று நினைத்து பார்க்கவில்லை என்றும், நல்ல வேலை அது தன்னை ஒன்றும் செய்யவில்லை என்று அதிர்ச்சியுடன் தெரிவித்தார்.