இந்தோனிசியாவில் இஸ்லாமிய தளத்தில் தீவிபத்து.! இடிந்து விழுந்த பிரமாண்ட குவிமாடம்.!.

ஜகார்த்தாவில் இஸ்லாமிய மையத்தின் பெரிய மசூதியில் ஏற்பட்ட தீவிபத்தில் அதன் குவிமாடம் இடிந்து விழுந்துள்ளது.

ஜகார்த்தாவில் இஸ்லாமிய மையத்தின் பெரிய மசூதியில் ஏற்பட்ட தீவிபத்தில் அதன் குவிமாடம் இடிந்து விழுந்துள்ளது.

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில், உள்ள இஸ்லாமிய மையத்தின் பெரிய மசூதியில் புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. புதுப்பிப்பு பணிகளின் போது மசூதியில் ஏற்பட்ட தீவிபத்தில் அதன் பெரிய குவிமாடம் இடிந்து விழுந்துள்ளது.

தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அனைத்து வந்தனர். விபத்து ஏற்பட்ட காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை.

மேலும் விபத்திற்கான காரணம் குறித்து புதுப்பிப்பு பணிகளில் ஈடுபட்ட காண்ட்ராக்டர்களிடம், போலீசார் விசாரணை செய்து வருவதாகவும், விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லையென்று போலீசார் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

20 வருடங்களுக்கு முன்னதாக அக்டோபர் 2002இல் இதே போன்று மசூதியின் குவிமாடத்தில் தீவிபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.