சீன வர்த்தக நிறுவன ஆலையில் தீ விபத்து.! 36 பேர் பலி.

மத்திய சீனாவில் வர்த்தக நிறுவனம் ஒன்றின் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் பலி மற்றும் இருவரை காணவில்லை என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய சீனாவில் வர்த்தக நிறுவனம் ஒன்றின் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் பலி மற்றும் இருவரை காணவில்லை என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள அன்யாங் நகரில் உள்ள ஆலையில் நேற்று (திங்கள்கிழமை) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது. கைக்சிண்டா டிரேடிங் கோ., லிமிடெட் என்ற இடத்தில் மாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது என்று மீட்புக்குழுவிற்கு தகவல் கிடைத்ததாக அரசு ஊடகம் தெரிவித்தது.

தகவல் கிடைத்ததும், நகராட்சி தீயணைப்பு மீட்புப் பிரிவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். நீண்ட முயற்சிக்கு பிறகு இரவு 11 மணியளவில் தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் குறைந்தது 36 பேர் உயிரிழந்துள்ளனர், மற்றும் இருவரை காணவில்லை, மேலும் இருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.