போலீசார் உடை அணிந்து விமான நிலையத்தில் 750 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த கும்பல்!

பிரேசிலின் தென் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள சாவ்பாலோ நகர விமான நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை இரண்டு கார்களில் ஆயுதங்களுடன் கூடிய போலீசார் உடையில் வந்த

பிரேசிலின் தென் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள சாவ்பாலோ நகர விமான நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை இரண்டு கார்களில் ஆயுதங்களுடன் கூடிய போலீசார் உடையில் வந்த மர்ம நபர்கள் சரக்கு கிடக்கிற்கு  சென்றனர்.

unknown node

சரக்கு கிடக்கில் இருந்து விமானத்திற்கு ஏற்றி செல்லும் சரக்கு வேனை வழிமறித்து 750 கிலோ தங்கத்தை கடத்தி சென்றனர்.பின்னர் தான் தெரிந்தது போலீசார் உடையில் வந்தவர்கள் போலீஸ் இல்லை கொள்ளையர்கள் என தெரிந்தது.

அந்த கொள்ளை கும்பல் சரக்கு கிடக்கு  தலைவர் உடைய குடும்பத்தை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து அவரை மிரட்டி தங்கம் எந்த வேனில் வரும் என்பதை தெரிந்து கொண்டு பின்னர் இந்த சம்பவத்தை நடத்தியதாக தெரியவந்தது.

unknown node

இந்நிலையில்  பாதுகாப்பு மிகுந்த விமான நிலையத்தில் கொள்ளையர்கள் 750 கிலோ தங்கத்தை போலீசார் உடையில் அணிந்து வந்து கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியை  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.