ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு காவல்துறை அதிகாரி உயிரிழப்பு!

A police officer has been killed in a terrorist shooting in the Afghan capital, Kabul. Also, 2 policemen were injured.

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு காவல்துறை அதிகாரி உயிரிழப்பு. மேலும், 2 போலீசார் காயம் அடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில், இன்று அதிகாலை பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் ஒரு போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டதுடன், மேலும் 2 போலீசார் காயம் அடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

காலை 6:30 மணி அளவில் ஆயுதம் ஏந்திய போராளிகள் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போது, கிழக்கு பகுதியில் உள்ள  புட்கார்ட் வட்டாரத்தில் ஒரு முக்கிய முக்கிய இடத்தில் போலீசார் சோதனை சாவடிக்கு வெளியே காவல் துறையினர் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இதனை அடுத்து காவல்துறை அதிகாரிகளை தாக்கிய பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.