இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்...அதிர்ச்சியில் ஆழ்ந்தபொதுமக்கள்.!

இந்தோனேஷியாவில் 7.0 ரிக்டர் அளவில்  சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவில் 7.0 ரிக்டர் அளவில்  சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சமீபகாலமாக பல நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இந்தோனேஷியாவின் ஜாவா தீவின் வடக்கு பகுதியில் டூபன் என்ற இடத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 7.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

உள்ளூர் நேரப்படி மாலை 4:55 மணிக்கு ஏற்பட்ட இந்த வலுவான நிலநடுக்கம் 594 கிலோமீட்டர்  ஆழத்தில் தாக்கியுள்ளது எனவும், இதனால் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்றும் இந்தோனேசியாவின் புவியியல் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

திடீரென  இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீடுகள், கட்டடங்கள் லேசாக குலுங்கியது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பேரதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.  மேலும், இதைப்போல நேற்று சீனாவின் சின்ஜியாங் பகுதியில் 4.0 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.