எரிமலை வெடிப்பு அல்லது எரிமலைச்சீற்றம் என்பது பேரழிவை ஏற்படுத்தும் ஒரு வகை இயற்கைச் செயல்பாடாகும். இந்த நிகழ்வில் பூமிக்கு அடியிலிருந்து பாறைத்துகள்களும், அதீத வெப்பமுடைய நீரும், கூழ்ம நிலையிலுள்ள பாறைகளும் அதிக அழுத்தத்துடனும்,அதீத விசையுடனும் பூமிக்கு மேற்பரப்பில் தூக்கி வீசப்படுகிறது.
தற்போது, இணையதளத்தில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் எரிமலை வெடிக்கும் அற்புதுமான காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த எரிமலை தீ பிழம்புகள் ஒரு பக்கம் அழிவை ஏற்படுத்தக்கூடியது என்றும் சொல்லலாம், மறுபக்கம் பல சுற்றுச்சூழல் நன்மைகளை வழங்குகின்றன என்றே சொல்லலாம்.
unknown nodeஎடுத்துக்காட்டாக, வளமான மண், நீர் வெப்ப ஆற்றல் மற்றும் விலைமதிப்பற்ற தாதுக்கள் போன்றவை எரிமலை வெடிப்பில் கிடைக்கிறது. ஆனால் அவை பல அபாயங்களையும் ஏற்படுத்துகின்றன. அதில் எரிமலை சாம்பல், வாயுக்கள், மண் பாய்ச்சல்கள், நிலச்சரிவுகள், எரிமலை ஓட்டங்கள் அடங்கும்.