கோர விபத்து : தஞ்சம் பெற ஐரோப்பாவுக்கு புறப்பட்ட மக்கள்... கப்பல் மூழ்கியதால் 73 பேர் பரிதாப பலி.!

சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து ஐரோப்பா நாட்டிற்கு புலம்பெயர முயன்ற மக்கள் சென்ற கப்பல் விபத்துக்குள்ளானது. இதில் 73 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து ஐரோப்பா நாட்டிற்கு புலம்பெயர முயன்ற மக்கள் சென்ற கப்பல் விபத்துக்குள்ளானது. இதில் 73 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து ஐரோப்பா நாட்டிற்கு ஏரளமான மக்கள் கப்பல் மூலம் கடல் வழியாக சென்றுள்ளனர். அப்போது லிபியா கடற்பகுதிக்கு அருகே வந்த போது பொதுமக்கள் வந்த கப்பலானது விபத்துக்குள்ளாகி நீரில் மூழ்கி கோர விபத்து ஏற்பட்டுளது.

unknown node

கோர விபத்து :இந்த கப்பலில் சுமார் 80க்கும் அதிகமானோர் பயணித்த்தாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 7 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். எனவே, 73 பேர் உயிரிழந்ததாக தற்போது கருதப்பட்டு, தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த செவ்வாய் கிழமை அன்று இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

7 பேர் மீட்பு :காணாமல் போனவர்களை இறந்தவர்களாக ஐநா அறிவித்துள்ளது. மேலும், இதுவரை 11 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உயிருடன் மீட்கப்பட்ட 7 பேரின் உடல் நிலையும் மோசமாக இருப்பதாகவும், அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்ப்பட்டு வருவதாவும் தகவல் வெளியாகியுள்ளது.

unknown node

புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை :புலம்பெயர்ந்து வரும் மக்கள் அதிகம் வருவது இந்த கடற்கரை பாதை தான் எனவும், மேலும் இந்த பகுதியில் விபத்துக்கள் நடப்பது அதிகம் எனவும் தகவல் வெளியாகியுள்ளன. மேலும், சமீபத்திய ஆண்டுகளில் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் இருந்து ஐரோப்பாவிற்கு வர முயற்சிக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருப்பதாகவும் லிபியா தெரிவித்துள்ளது.